Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காவலர்களுக்கு சுக்கு, மிளகு பால் கொடுத்தும், சுண்டல் கொடுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் அமைப்பினர்

காவலர்களுக்கு சுக்கு, மிளகு பால் கொடுத்தும், சுண்டல் கொடுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் அமைப்பினர்
, புதன், 29 ஏப்ரல் 2020 (22:25 IST)
அகில பாரத ஐயப்ப தர்மபிரச்சார சபா சார்பில் ஊரடங்கு உத்திரவில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு சுக்கு, மிளகு பால் கொடுத்தும், சுண்டல் கொடுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் அமைப்பினர் !  கரூரில் தினந்தோறும் மாலை நேரத்தில் விநியோகிக்கும் சுக்குமிளகு பால் !!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், அந்த வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு உத்திரவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்திரவில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு, அகில பாரத ஐயப்ப தர்மபிரச்சார சபா சார்பில் கரூர் நகரம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்திரவு பணியில் ஈடுபட்டுள்ள, காவல்துறையினர், ஊர்காவல்படையினர், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் செய்தியாளர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் தினந்தோறும் சுக்கு, மிளகு கலந்த மூலிகை பாலினை விநியோகித்து வருகின்றனர்.

தேசிய பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடேஷன் தலைமையில், தேசிய செயலாளர் எல்.ஆர்.ராஜூ, மாவட்ட செயலாளர் கே.கனகராஜ், மாவட்ட தொண்டர்படை தளபதி வி.தயானந்தன், மாவட்ட துணை தலைவர் சங்கரநாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.வாசுதேவன், எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர், தினந்தோறும் கரூர் அடுத்த காந்திகிராமம் கிருஷ்ணாநகரில் இருந்து மாலை நேரத்தில் அகில பாரத ஐயப்ப தர்மபிரச்சார அமைப்பு மூலம் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி, காந்திராமம் புறக்காவல்நிலையம், சுங்ககேட், திருமாநிலையூர், லைட் ஹவுஸ் கார்னர், கரூர் நகர காவல்நிலையம், சர்ச் கார்னர், மார்க்கெட், திருக்காம்புலியூர் ரவுண்டானா, முனியப்பன் ஆலயம் அருகே மட்டுமில்லாது, கரூர் பேருந்து நிலையம், ஐந்து ரோடு, பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளிலும், வெங்கமேடு, வாங்கப்பாளையம் என்று அனைத்துப்பகுதிகளிலும் விநியோகித்து வருகின்றனர்.

சுக்குமிளகு கலந்த பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றதோடு, அதனிடையே, சுக்குமிளகு பாலுடன், பருப்பு மற்றும் சுண்டல்களையும் உடல்வலிமைக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சுண்டல்களை தந்து வருவதாக தேசிய பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடேஷன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மூலிகை பால் மற்றும் சுண்டல், பருப்பு வகைகளை மாநில மகளீரணி அமைப்பாளர் எம்.குணவதி செய்து கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐநா., அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமனம்!