Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆசிரியர் தவறவிட்ட ஏடிஎம் கார்டு! பணத்தை அபேஸ் செய்த மாணவர்! – மதுரையில் நூதன திருட்டு!

ஆசிரியர் தவறவிட்ட ஏடிஎம் கார்டு! பணத்தை அபேஸ் செய்த மாணவர்! – மதுரையில் நூதன திருட்டு!
, புதன், 3 ஜனவரி 2024 (11:16 IST)
கீழே கிடந்த ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பதற்கான பின் எண்ணும் எழுதியே போடப்பட்டிருந்ததால் பணத்தை எடுப்பது எளிதாகியுள்ளது.



மதுரை அழகப்பன் நகர் மஞ்சு அடுக்குமாடி வீட்டில் வசித்து வருபவர் குமார் பாபு (வயது 60) திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளியில்    ஆசிரியராக பணிபுரிகிறார்.

கடந்த மாதம் 20ஆம் தேதி திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மூலமாக ரூபாய் 500 பணம் எடுத்துள்ளார். பின்னர் ஏ.டி.எம்., கார்டை தனது பையில் வைத்து விட்டதாக நினைத்து தவற விட்டுள்ளார்.

அதன் பின்பு மறுநாள் 21 ஆம் தேதி காலை அவரது செல்போனுக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. இதனை தொடர்ந்து வங்கிக்கு போன் செய்து தனது ஏ.டி.எம் கார்டை பிளாக் (தடை) செய்யுமாறு கேட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நாகராணி அவர்களிடம் புகார் செய்ததையடுத்து வழக்கு பதிவு செய்து ஏ. டி .எம் இல் திருடியவர்களை போலீஸார் தேடி வந்தனர் அப்போது ஏ.டி.எம் கேமரா மூலமாக ஆசிரியர் குமார் பாபு வங்கி அட்டையை இரு நபர்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.

கேமராவில் பதிவான அவர்களின் இரு நபர்களின் முகத்தை வைத்து போலீசார் விசாரணையில் திருப்பரங்குன்றம் கீழத்தெரு குப்பையன் கிணற்று சந்தை சேர்ந்த சரவணன் மகன் பாலா (வயது 23) மற்றும் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்வி பட்டி வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த சுப்ரமன் மகன் பரணி (வயது 27) இவர் எம்பிஏ பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

பரணி, பாலா இவர்கள் இருவரும் சேர்ந்து கீழே கிடந்த ஆசிரியரின் ஏடிஎம் கார்டை எடுத்து அதில் எழுதப்பட்டிருந்த (எண்களை) நம்பர்களை வைத்து ரூபாய் 35 ஆயிரம் பணம் எடுத்ததை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்துதிருப்பரங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களை அச்சப்படுத்தும் சென்செக்ஸ்..!