Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

’ஐபோனை’ குறிவைத்து திருடிய இளைஞன் கைது...

’ஐபோனை’ குறிவைத்து  திருடிய இளைஞன் கைது...
, சனி, 17 நவம்பர் 2018 (17:15 IST)
இன்றைய இளைஞர்களுக்கு வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறதோ இல்லையோ ஆனால் கட்டாயம் வீட்டில் பெற்றோரை அதட்டியாவது இல்லை எப்பாடு பட்டாவதும் ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த மாடலான ஐபோனை வாங்கி பந்தாவாக பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறார்கள்.

webdunia
 
வருமானத்துக்கு இழுக்கு வராத போது தன்மானத்துக்கும் எந்த சேதாரமுமில்லை.அப்படியிருக்க இந்தக் காலத்து இளைஞர்கள் பேராசைக்கு அடிமைகளாக மாறிவருகின்றனர்.
 
கால பரிணாமத்துக்கு ஏற்ப முன்னேறத்துடிப்பவர்களுக்கு இதில் எந்த சிக்களும் இல்லை.மாறாக அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவர்களால்தான் இந்த உலகில் அமைதிக்கே பங்கம் விளைகிறது.
webdunia
மாற்றம் என்பது தவிர்க்க முடியாது.ஆனால் அந்த மாற்றத்துக்கு ஏற்ப மனிதன் தன்னை உருமாற்றிகொள்ளுகிறபோதுதான் நன் சமுதாயமும் வளர்ச்சிடையும். இதில்லையென்றால் மொத்த சமுதாயமும் பள்ளத்தில்தான் தலைகுப்புற விழ நேரிடும்.
 
காலம் எவ்வளவு தூரம் முன்னேறி உள்ளதோ அவ்வளவு தூரம் திருட்டும் வஞ்சகமும் அதிகரித்துள்ளது.
webdunia
சென்னையில் உள்ள பெரம்பூரில் வெகு நாட்களாகவே ஆப்பிள் போன்கள் திருட்டுப்போவதும், பறிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது. போனை பறிகொடுத்தவரகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததால் போலீஸார் துரித கதியில் விசாரணையை நடத்தி வந்தனர்.
webdunia

இந்நிலையில்  பெரம்பூர் பகுதியில் காணாமல் போன மொத்த ஐபோன் திருட்டுக்கும் காரணம் யார் என்று இப்போது போலீஸாருக்கு தெரிய வந்ததும் அவர்கள் திகைப்படைந்துவிட்டனர்.
 
ஆம்! ஆப்பிளின் ஐ போன் தொழில்நுட்பத்துக்கே  சவால் விடுவதாக  வெறும் எட்டாம் வகுப்பு படித்த அப்துல்ரஹ்மான் என்ற இளைஞர் பிறரிடமிருந்து ஐ போனை பறித்த பின்  அதில் உள்ள சிம்கார்டை கழற்றி வேறு சிம்கார்டை போடும் போது போனில் உரிமையாளருக்கு செல்லும் குறுஞ்செய்தியின் மூலமாக ஐபோனின் பாஸ்வேர்டை பெற்றுகொண்டு   அதை  புதிய போனாக மாற்றி நூதனமான முறையில் விற்று வந்துள்ளார்.
webdunia
மேலும் போனை பறிகொடுத்த உரிமையாளர் தனக்கு போன் கிடைக்க வேண்டும் என்ற தவிப்பில் அவரது செல்லுக்கு வரும் குறுஞ்செய்தியில் கேட்கும் கேள்விக்கு ஐ போனுக்கு உரிய பாஸ்வேர்டை கொடுக்க இதை பயன்படுத்தி தான் ஏற்கனவே திருடிவைத்திருக்கும் போன்களை அப்துல்ரஹ்மான் தன் கடையில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளதை போலீஸார் தற்போது கண்டுபிடித்து அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
.
webdunia
இவரிடமிருந்து ஏராளமான ஐ போன்களும், பல ஸ்மார்ட் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்ம கேப்டனும் பாராட்டிடார்ல எடப்பாடி அரசை....