திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீஸ் வாகனம் திருடு போன சம்பவம் அங்கு இருந்த மக்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சில மாதங்களாக வாகனம் நிறுத்தமிடம் செயல்படாத நிலையில் உள்ளது. ரயில்வே நிர்வாகம் வாகன நிறுத்திமிடத்திற்கு ஏலத் தொகையை அதிகமாக கேட்டதால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
இதனால் ரயில்வே நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களின் வாகனங்களை செயல்படாத வாகன நிறுத்ததிலேயே நிறுத்தி விட்டு செல்கிறார்கள். அங்கு நிறுத்தபடும் வாகனங்கள் திருடுபோவதாக பல முறை குற்றசாட்டுகள் எழுந்தும், இதற்கான நடவடிக்கை எதுவும் ரயில்வே நிர்வாகத்தால் எடுக்க படவில்லை.
இந்நிலையில் ரயில்வே போலீஸார் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை அந்த வாகன நிறுத்ததில் நிறுத்தி விட்டி சென்றுள்ளார். அந்த போலீஸ் வாகனத்தையே திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் வாகனத்திற்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்கள் வாகனத்திற்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.