ஏசி காரில் ஓசியில் சுற்றிய சசிகலா: இது தான் உங்கள் தியாகமா?
ஏசி காரில் ஓசியில் சுற்றிய சசிகலா: இது தான் உங்கள் தியாகமா?
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தடுக்கப்பட்டது முதல் அவரை அவரது ஆதரவாளர்கள் தியாகத்தலைவி என கூறி வருகின்றனர். ஜெயலலிதாவுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர் சசிகலா என புகழ்ந்து வந்தனர் சசிகலா ஆதரவாளர்கள்.
மேலும் சிகலா செய்த தியாகத்தால் அவரது அக்காள் மகன் தினகரன் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனவும் கூறிவந்தனர் அதிமுக அம்மா அணியை சேர்ந்தவர்கள். இப்படி சசிகலாவை தியாகத் தலைவியாக சித்தரிப்பதை ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இதனையடுத்து ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார் தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ், ஓய்வுபெற்ற திலகவதி.
இவர் தற்போது சசிகலாவின் தியாகம் குறித்து விமர்சித்துள்ளார். சசிகலா அப்படி என்ன தியாகத்தை செய்துவிட்டார். 33 ஆண்டுகள் அம்மாவோடு ஏசி காரில் ஓசியில் சென்றது எல்லாம் ஒரு தியாகமா? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஒரு தியாகமா என சாடினார். மேலும் மக்கள் சசிகலாவை வெறுப்பது போல தினகரனையும் வெறுப்பதாக கூறினார்.