Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு தினம்...விஜயபாஸ்கர் மலர் தூவி மரியாதை

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (22:16 IST)
கரூரில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப் படத்திற்கும், மாமன்னர் வல்வில் ஓரி அவர்களின்  திருவுருவப் படத்திற்கும் கரூர் மாவட்டக் கழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு தினம் மற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவரான மாமன்னர் வல்வில் ஓரி அவர்களின்  அரசு விழாவை முன்னிட்டு,
 
கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் மாண்புமிகு முன்னாள்  அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்களின் தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை மற்றும் வல்வில் ஓரி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் திரு.சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திரு.திருவிகா, கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பசுவை திரு.சிவசாமி, மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் திரு.கமலகண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் திரு.தானேஷ் (எ) முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.ரேணுகா மோகன்ராஜ்,  ஒன்றிய செயலாளர்கள் திரு.மார்கண்டேயன், திரு.மதுசுதன், திரு.செல்வகுமார், பேரூர் கழக செயலாளர் திரு.அரவிந்த், கரூர் பகுதி கழக செயலாளர்கள் திரு.விசிகே.ஜெயராஜ், திரு.சேரன் பழனிச்சாமி, அண்ணமார் திரு.தங்கவேல், திரு.ஆண்டாள் தினேஷ் குமார், திரு.சுரேஷ் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, பகுதி கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments