Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றி இருக்கிறார் ஸ்டாலின்… திருமா வளவன் பாராட்டு!

பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றி இருக்கிறார் ஸ்டாலின்… திருமா வளவன் பாராட்டு!
, சனி, 14 ஆகஸ்ட் 2021 (16:16 IST)
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை 1970 ஆம் ஆண்டே கலைஞர் கருணாநிதி இயற்றினாலும், அது சம்மந்தமான வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இது சம்மந்தமாக சாதகமான தீர்ப்பு வந்தும் அதை நிறைவேற்ற முடியாத சூழலே இருந்தது. இடையில் கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இப்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழகத்தில் அந்த திட்டத்தை தொடங்கி 58 பேருக்கு அதற்கான அரசாணையை வழங்கியுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். இந்நிலையில் இதுகுறித்து பேசிய திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் ‘பெரியாரின் கனவை தமிழக முதல்வர் நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் மைதானங்களைக் கைப்பற்றிய தாலிபான்கள்… ஆப்கானிஸ்தானில் பதற்றம்!