பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நாளன்று நடந்த தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தாக்குதலில் காயம்பட்டவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாவட்டங்களின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் இன்றும் நாளையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் நடந்த கண்டன கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் ’நான் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் இப்போதே அரசியலில் இருந்து விலகத்தயார். எனக்குத் தேவை உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதே’ எனக் கூறியுள்ளார்.