என்னுடைய செல்போன் உளவு பார்க்கப்பட்டது சட்ட விரோதமானது என திருமுருகன் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் வேவு பார்ப்பதற்கு 50,000-த்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்களும் உள்ளன. அதில் ஒருவர் திருமுருகன் காந்தி.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, என்னுடைய செல்போன் உளவு பார்க்கப்பட்டது சட்ட விரோதமானது. ஒட்டுக்கேட்பு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகத்தை அச்சுறுத்தும் செயல். இது தொடர்ச்சியாக அனைவருக்கும் நடக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார்.