திருப்பூரில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் இதனை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர் காவல் துறையினர். அப்படி திருப்பூர் காவல் கண்காணிப்பில் சிக்கிய தான் இந்த வீடியோ.
ஒருசிலர் மரத்தடியில் கேரம்போர்ட் விளையாட போலீஸ் ட்ரோன் அங்கு வந்ததது, சிறதி அடித்து ஓடும் சிலரில் ஒருவர் மட்டும் கேரம்போர்ட்டை கேப்டன் அமெரிக்காவாக் மாறி ஷீல்டாக சிறிட்து நேரம் பிடித்து மறைய முயற்சிக்கிறார்.
பின்னர் இதை வேலைக்கு ஆகாது என நினைத்து கேரம் போர்டை தூக்கி ஓடியவன் ஒரு கட்டத்தில் அந்த போர்டையும் கீழே வீசிவிட்டு ஓடிய காட்சிகளை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர். இப்போது அந்த அண்ணன் தான் மீம் கிரியேட்டர்களின் கண்டெண்டாக உள்ளார். இதோ இந்த வீடியோ...