Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மோடியின் பெயரைக் கூட சொல்லவே பயந்து நடுங்குபவர்கள் அதிமுகக்காரர்கள்! - விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர்!

Manikam Tagore MP

J.Durai

, செவ்வாய், 9 ஜனவரி 2024 (18:31 IST)
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 7லட்சம் மதிப்பீட்டில் எலியார்பத்தி பஸ் நிறுத்தம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


 
இதில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக்கம் தாகூர் பேருந்து நிறுத்தம் பணிகளை அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:

 பேருந்து ஓட்டுநர்கள் போராட்டங்கள் குறித்து கேள்விக்கு

போக்குவரத்து துறை அமைச்சர்  தொழிலாளர்களின் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பதாகவும். நிதி பிரச்சனையால்  கோரிக்கைகளில் 4 ல் ஒரு கோரிக்கை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு செல்ல வேண்டும். வேலை நிறுத்தம் என்பது பொங்கல் பண்டிகை நாளில் சாமானிய மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பொதுமக்களை சிரமப்படுத்தும் போராட்டங்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அரசு பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கும்போது இந்த போராட்டம் அவசியம் அற்றது போராட்டத்தை நிறுத்திவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்

 ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் குறித்து அண்ணாமலை விமர்சனம் குறித்த கேள்விக்கு:
அண்ணாமலையிடம் கேட்டீங்கன்னா சர்வர்கர் பெயரை வைக்க சொல்லுவாரு. ஜல்லிக்கட்டுக்கும் சர்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அண்ணாமலை பொருத்தமட்டில் ஆர் எஸ் எஸ் ஆல் உருவாக்கப்பட்டிருப்பவர் அவரைப் பொறுத்தவரை தமிழுக்காக போராடுபவர்களை கேவலப்படுத்துவது தான் ஆர்எஸ்எஸின் நோக்கம்.

அதைத்தான் அவர் செய்கிறார் அதற்காகத்தான் அவரை ஆர் எஸ் எஸ் அனுப்பி வைத்துள்ளது. அவர் அப்படி பேசவில்லை என்றால் அவரை வேலையை விட்டு தூக்கி விடுவார்கள்.

 
சிறுபான்மை மக்களை பாதுகாக்க கூடிய ஒரேகட்சி அதிமுக தான் என எடப்பாடி பேசியது குறித்த கேள்விக்கு:

மகிழ்ச்சியான விஷயம் 2021 தேர்தலுக்குப் பிறகு அண்ணன் எடப்பாடியாருக்கு சிறுபான்மையினர் மீது அன்பு வந்திருக்கிறது.

பிஜேபி அணியில் இருக்கும் போது இந்த நினைப்பு அவருக்கு இல்லை.  சி ஐ ஏ என் ஆர் சி போன்ற சட்டங்களை இயற்றும் போது சிறுபான்மை மக்களை பற்றிய நினைப்பு அதிமுகவுக்கு இல்லை. சிறுபான்மையினருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் போது ஒரே ஒரு உறுப்பினராக இருந்த ரவிந்தரநாத் கூட ஆதரவு தான் தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.அப்போதெல்லாம் அவருக்கு  சிறுபான்மை மக்கள் மீது நினைப்பு இல்லை. 2024 ல் தேர்தல் வரும் போது மட்டும் சிறுபான்மையினர் ஞாபகம் வருகிறது. இதனை சிறுபான்மையின மக்கள் நன்கு அறிவார்கள்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்வி :

இந்த தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பதும் தேர்தலின் போது நேரடியாக கூட்டணி வைப்பார் என்றும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

கூட்டணி இல்லாமல் பாஜக வுடன் கூட்டணி இல்லை அவர் நிரூபித்து காட்டட்டும். உண்மையிலேயே அவர் முதுகெலும்பு உள்ளவர் சொன்னதை செய்யக்கூடியவர்.

இன்னும் மோடியை பற்றி ஒரு தீர்மானம் கூட போட முடியாத ஒரு கட்சியை நடத்துகிறார். மோடியின் பெயரைக் கூட சொல்ல பயப்படுபவர்கள் அதிமுக காரர்கள் இப்படிப்பட்ட வீர வசனத்தை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

வருகிற தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்பவதற்க்காக மக்கள் அளிக்கக்கூடிய வாக்காக இருக்கும்  என்ன விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் முதலீடு ஈர்ப்பு குஜராத்தை விட குறைவு- அண்ணாமலை