திருப்பூர் ஸ்ட்ராங் ரூமிலும் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை.. மின்சார தடை காரணமா?
, புதன், 15 மே 2024 (06:35 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்தது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு வைக்கப்பட்ட ஸ்டராங் ரூமில் அவ்வப்போது சிசிடிவி கேமராக்கள் பழுதாகி வருவதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதும் இதற்கு தேர்தல் ஆணையம் அவ்வப்போது விளக்கம் கொடுத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
ஏற்கனவே நீலகிரி, தென்காசி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதான நிலையில் தற்போது திருப்பூரிலும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையின் சிசிடிவி கேமராக்கள் சிறிது நேரம் இயங்கவில்லை என்றும், பவானி சட்டப்பேரவை தொகுதி வாக்குகள் வைக்கப்பட்ட அறையின் கேமராக்கள் மின்சார தடை காரணமாக இயங்கவில்லை என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கேமரா இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்