அமமுக தலைவர் டிடிவி தினகரன், தனது கட்சியை ஆரம்பித்த உடன் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், அவரது முக்கியமான கட்சி நிர்வாகிகளான செந்தில் பாலாஜி மற்றும் தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் அக்கட்சியை விட்டு வெளியேறி அவருக்கு அதிர்ச்சி தந்தனர்.
இந்நிலையில் சமீக காலமாக தினகரனுக்கு எதிராக நின்று பேசி வரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, அதிமுக கட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறிவிட்டார். அதனால் அமமுகவில் மேலும் ஒருவர் கழன்றுசெல்ல உள்ளார்.
இந்ந்நிலையில், இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்தும், இன்று முதல்வர் எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்த புகழேந்தி, இதயத்தில் இருந்து அவரை வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து,சொத்து குவிப்பு வழக்கில் , பெங்களூரில் உள்ள அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை, இன்று தினகரன் சந்தித்தார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
24 வது புலிகேசியாக புகழேந்தி உருவாகி வருகிறார்.கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆகனும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ,தினகரன் 23 ஆம் புலிகேசி என்று கூறி தினகரனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.