தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்து இருப்பதால் இந்த சூழ்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டின் மீதும் தென்னிந்தியாவின் மீதும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறு வரையறை உள்ளதாகவும் மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி மக்கள் தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் தொகையை குறைக்கும் மாநிலங்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் என்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசை பெரும் என்றும் அவற்றுக்கான பிரதிநிதித்துவம் அதிகமாகும் என்றும் இதை நாம் எதிர்த்தாக வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.