தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கடிதம் எழுதி அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இந்த பாடம்தான் தமிழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் யூஜிசி, தன்னாட்சி அதிகாரம் வழங்கி உள்ள நிலையில் பொது பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது என ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் எழுதியுள்ள இந்த கடிதம் தமிழக அரசு மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.