திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு சீட்டு கேட்டுக் கொண்டிருந்த நிலையில் சீட்டுக்கு பதிலாக அக்கட்சியின் தலைவருக்கு பதவி வழங்கி திமுக தலைவர் ஸ்டாலின் சமாதானப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளை திருப்தி செய்து அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணியில் திமுக தலைவர்கள் உள்ளனர் என்பதும் அதில் தற்போது திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அப்துல் சமது தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதி கேட்டதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கு தொகுதிகள் கொடுக்கவே சிக்கல்கள் இருக்கும்போது மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் கொடுக்க முடியாத நிலையை விளக்கிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அதற்கு பதிலாக அவரை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக நியமனம் செய்தார்
இது தொடர்பாக தமிழக அரசு இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டு அவரது நியமனத்தை உறுதி செய்துள்ளது. ஹஜ் கமிட்டியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்துல் சமது தற்போது மணப்பாறை தொகுதிகள் எம்எல்ஏவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.