தமிழகத்தில் அரசின் வளர்ச்சி பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தும்போது உரிமையாளர்களிடம் ஆலோசிக்க தேவையில்லை என்று தமிழக அரசு புதிய சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் அரசின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும்போது கையகப்படுத்தும் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு அதன் உரிமையாளர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற செயல்பாடுகளால் வளர்ச்சி பணிகள் தாமதமாவதாகவும், இடைப்பட்ட காலத்தில் அந்த நிலத்தை உரிமையாளர் வேறொருவருக்கு விற்று விட்டால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் மேலும் சிக்கல்களும், கால தாமதமும் ஏற்படுவதால் இனி நிலங்களை கையகப்படுத்த உரிமையாளருடன் கலந்தாலோசிக்க தேவையில்லை என சட்டம் இயற்ற நேற்று சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மசோதா மீதான சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை அளிக்க விரும்புபவர்கள் கடிதமாக எழுதி அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.