Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: மலையேறும் பக்தர்களுக்கு நெறிமுறைகள்..!

Tiruvannamalai
, செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:16 IST)
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 26 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மலையேறும் பக்தர்களுக்கு சில நிபந்தனைகளுடன் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 தீபத் திருவிழா தினத்தன்று  திருவண்ணாமலை அரசு கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் அதிகபட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மலையேறும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட  ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்து அனுமதி சீட்டு பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மலையேறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும்  காலி தண்ணீர் பாட்டில்களை திருப்பிக் கொண்டு வர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கற்பூரம் உள்ளிட்ட எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை மலைக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும்  கொண்டு செல்லும் நெய்யினை கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும் என்றும் வேறு இடத்தில் ஊற்றக்கூடாது என்றும் தீபம் ஏற்ற கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைஜூஸ் நிறுவனத்திற்கு ரூ.9000 கோடி நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை