மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்கினால் பேருந்து ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்படுவார் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அரசுப் பேருந்துகளில் மது அருந்திவிட்டு பின்பு பணியில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சற்று முன் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
கடந்த சில நாட்களாக சில அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்தி விட்டு பணிக்கு வருவதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு இன்று இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்று மது அருந்தி பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்தால், பணி நீக்கம் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.