தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்தி தெரியவில்லை என்பதால் மும்பை விமான நிலைய அதிகாரிகள் அவரை அவமதித்தனர். இதனால் அந்த இளைஞரின் டுவீட் பிரதமர் மோடி வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது
தமிழகத்தை சேர்ந்த சாமுவேல் என்பவர் அமெரிக்காவில் பி.எச்.டி. படிப்பு படித்து வருகிறார். விடுமுறை முடிந்த பின்னர் நியூயார்க் செல்ல மும்பை விமான நிலையத்திற்கு சென்ற இவரிடம் விமான நிலைய அதிகாரிகள் இந்தியில் கேள்வி கேட்டனர். அப்போது சாமுவேல் தனக்கு இந்தி தெரியாது என்றும், தனக்கு தெரிந்த ஆங்கிலம் அல்லது தமிழில் கேள்வி கேட்குமாறும் தெரிவித்தார். அதற்கு அந்த அதிகாரி 'இந்தி தெரியாவிட்டால் தமிழ்நாட்டிற்கு திரும்பிபோ என்று கூறி அவதித்துள்ளனர்.
இதனையடுத்து அமெரிக்கா சென்ற சாமுவேல் அங்கிருந்து தனக்கு நேர்ந்த அவமதிப்பை டுவிட்டரில் பதிவு செய்து அதனை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சசி தரூர் ஆகியோர்களுக்கு டெக் செய்துள்ளார். இதனையடுத்து சில நிமிடங்களில் டுவிட்டரில் பெரும் வாக்குவாதமாக இந்த விவகாரத்தால் சுதாரித்து கொண்ட மும்பை விமான நிலைய அதிகாரிகள் சாமுவேலை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.