முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதால் 44 போலீஸாருக்கு மெமோ அனுப்பட்டுள்ளதால், தமிழக காவல்துறையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 25 ஆம் தேதி திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். தரிசனத்தை முடித்துக்கொண்டு காரில் வேலூர் வழியாக சேலத்துக்கு சென்றார்.
அப்போது வேலூரில் பாதுகாப்பையும் மீறி தொண்டர்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். தொண்டர்களால் முதல்வருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது.
இதனால், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸ், 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 40 போலீஸார் என 44 பேரிடம் விளக்கம் கேட்டு மெமோ அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் விளக்கத்தில் திருப்தி இல்லையென்றால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.