பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக பொதுகுழு மற்றும் செயற்குழு கூடவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூடும் இந்த கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கும் தீர்மானம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த 2017ஆம் ஆண்டு கூடிய அதிமுக பொதுக்குழுவில் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது மற்றும் சசிகலாவின் அனைத்து நியமனங்களும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் கட்சியின் முக்கிய முடிவுகளை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் எடுப்பார்கள் என்ற தீர்மானமும் இயற்றப்பட்டது. மேலும் 2016ஆம் ஆண்டு சசிகலா தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் சிறையில் இருக்கும் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் உள்பட ஒருசில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வியூகமும் இன்று பொதுகுழு மற்றும் செயற்குழு உறுப்பினரகளால் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது