புரட்சி தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடந்த ஆண்டு இதே நாளில் தான் வெளியுலகினர் பார்த்த கடைசி நாள். கடந்த ஆண்டு இன்று நள்ளிரவில் தான் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறிய உடல்நலக்குறைவுதான், சிறிய அளவில் காய்ச்சல்தான் என்று ஆரம்பித்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சையை அதிகரித்து, லண்டன் டாக்டர் வந்து சிகிச்சை செய்தும் கடைசியில் டிசம்பர் 5ஆம் தேதி அப்பல்லோவில் இருந்து பிணமாகத்தான் வெளியே கொண்டு வந்தார்கள்.
இதற்கு இடையில் அம்மா இட்லி சாப்பிடுகிறார், ஜுஸ் குடித்தார்கள், டிவி பார்த்தார்கள் என்று ஏமாற்றிய நயவஞ்சகர்கள் ஏராளம். ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு வருடம் நெருங்கவிருக்கும் நிலையிலும் இன்னும் அவரது மரணத்தின் மர்மம் குறித்தவிசாரணையே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.