Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா?

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா?
, புதன், 26 ஜனவரி 2022 (07:29 IST)
சென்னையில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்த நிலையில் இன்றும் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்று அறிவித்ததை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னர் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

35.89 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!