அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜியின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்க கோரிக்கை செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்;
இந்த நிலையில் 32வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது என்பதால் இன்று அவர் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மீண்டும் 33 வது முறையாக அவருக்கு காவல் நீடிக்கப்படுமா? அல்லது ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
முன்னதாக அமலாக்கத்துறை கைது செய்து பல மாதங்கள் ஆன பின்னரும் சுப்ரீம் கோர்ட் சென்றும் இன்னும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்பாவது அவர் ஜாமீனில் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.