தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளுக்கு வரும் 1ந் தேதி முதல் கண்டனம் உயருகிறது.
சுங்கக்கட்டணங்கள் அவ்வப்போது உயர்ந்து மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றது. அந்த வகையில் தற்போது திண்டிவனம், சூரப்பட்டு, வானகரம், பரனூர் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 3 முதல் 5 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுங்கக்கட்டண உயர்வால் அந்த வழியில் வரும் பேருந்துகளின் கட்டணமும், காய் கறிகள் மற்றும் அத்தியாவசப்பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். எந்த அரசு வந்தாலும் இந்த சுங்கக்கட்டணகொள்ளையை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை என்பதே மக்களின் ஆதங்கமாகவும் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.