சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி விலை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விலை சரிந்தது என்பதும், தக்காளி விலை ரூபாய் 60 முதல் 80 வரை விற்பனையாகிக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து வியாபார்கள் கூறியபோது மழை நின்ற போதிலும் தக்காளி வரத்து குறைவாக இருக்கும் காரணத்தினால் தக்காளியின் விலை 100 என்ற அளவில் நிலைத்து நீடித்து வருகிறது என்பதும் வழக்கமாக 70 லாரிகளில் வரக்கூடிய தக்காளி தற்போது 40 லாரிகளில் மட்டுமே வருவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். மேலும் டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்