கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் தக்காளியின் விலை ஒரு கிலோ 130 முதல் 150 வரை விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றும் தற்காலிக வரத்து குறைந்ததால் ஒரு கிலோ 20 ரூபாய் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சென்னையில் உள்ள சில்லறை கடைகளில் தக்காளியின் விலை 150 முதல் 170 வரை விற்பனையாகி வருவதாகவும் இதனால் தக்காளி வாங்குவதையே பொதுமக்கள் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது என்பதால் பலர் தக்காளியை மிகவும் குறைவான அளவு வாங்கி செல்வதாகவும் ஒரு கிலோ இரண்டு கிலோ வாங்கியவர்கள் தற்போது 100 கிராம் 200 கிராம் மட்டும் வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது.
மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதாகவும் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.