பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைக்கப்படவில்லை என்றும் அதுமட்டுமின்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணம் நிலுவையில் இருப்பதாகவும் போனஸ் தொகை குறைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது
எனவே இதுகுறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாக அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிப்ரவரி 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன