மசோதாக்கள் நிறுத்தி வைப்பது குறித்து ஆளுநர் ரவி கூறிய கருத்துக்கு திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக மசோதா ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தப்பட்டிருந்தால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் என மாணவர்கள் மத்தியில் பேசிய போது ஆளுனர் ரவி கூறினார். இதற்கு திமுக எம்பி கனிமொழி கூறிய போது ஆதாரங்களை ஆளுநர் தரவேண்டும் என்றும் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சி சிவா கூறிய போது குறிப்பிட்ட காலம் மட்டுமே ஒரு மசோதாவை ஆளுநர் கையெழுத்து போடாமல் வைத்துக் கொள்ள முடியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கடைப்பில் போடுவது ஆளுனரின் வரம்புகளுக்கு மீறிய செயலாகும். ஒவ்வொரு மாநில அரசுகளும் அவர்களுக்கு தேவையான சட்டங்களை ஏற்றுக்கொள்ள வழிவகை உள்ளது, அதற்குரிய ஒப்புதல் வழங்குவது ஆளுநரின் கடமை என்று தெரிவித்துள்ளார்.