டிடிவி தினகரன் வேட்புமனு தள்ளுபடி?: மனுவை ஏற்க தேர்தல் அலுவலர் தயக்கம்!
டிடிவி தினகரன் வேட்புமனு தள்ளுபடி?: மனுவை ஏற்க தேர்தல் அலுவலர் தயக்கம்!
அதிமுக அம்மா அணி சார்பாக ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தக்கல் செய்தார் டிடிவி தினகரன். அவரது வேட்புமனுவை ஏற்பதை நிறுத்தி வைத்துள்ளது தேர்தல் ஆணையம். முடிவு பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளது.
டிடிவி தினகரன் மீது அன்னிய செலவானி மோசாடி வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என 60 பக்க மனுவை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தது திமுக. இதனால் அவரது மனுவை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மனுவை ஏற்பது குறித்து முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அலுவலர் பிரவின்நாயர் கூறியுள்ளார்.
தினகரனின் மனு மீது சில ஆட்சேபனைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அன்னிய செலவானி வழக்கு நிலைவையில் உள்ளது. இதன் விசாரணையில் தான் சிங்கப்பூர் நாட்டு குடிமகன் என அவர் கூறியுள்ளார். இதுபோன்ற ஆட்சேபனைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் தேர்தல் அலுவலர். தினகரன் வேட்புமனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு வட்டாரத்தில் பேசப்படுகிறது.