அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாகத்தான் வழங்கப்பட்டுள்ளது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிடிவி தினகரன் கருத்து கூறிய போது இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு தற்காலிகமாக தான் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ பன்னீர் செல்வத்தை சந்திப்போம் என்றும் நாங்கள் எடப்பாடி பழனிசாமி உடன் என்றைக்கும் இணைய மாட்டோம் என்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுடன் மட்டும் தான் இணைவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் இருந்தபோது செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது என்றும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடம் அதன் செல்வாக்கை இழந்து வருகிறது என்றும் வருங்காலத்தில் அந்த சின்னத்தை செல்லாக்குள்ள சின்னமாக மாற்றும் காலம் விரைவில் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.