சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபடமல் இருந்த அமமுக மீண்டும் கலத்தில் புது உற்சாகத்துடன் இறங்கியுள்ளது.
கடந்த 2019 ஆம் நாடளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு பின்னர் அமமுக தோல்விகளாளும் நிர்வாகிகளின் விலகளாலும் துவண்டுபோய் இருந்தது. இதனிடையே டிடிவி தினகரன் முதற் உற்சாகமாக சென்னை இராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தை திறந்துவைத்தார்.
அதன் பின்னர் தற்போது, 2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவார் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார்.
இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் புது தெம்பை பெற்றுள்ளனர். அதோடு, சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் அமமுக சார்பில் குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களை உருவாக்க வேண்டும் என்பதே தினகரனின் குறிகோளாக உள்ளதாம்.
முன்பை போல எல்லாவற்றிற்கும் ஆசைபடாமல் எம்மால் என்ன முடியுமோ அதை பெற தினகரன் முயற்சி செய்கிறார். இந்த மாற்றம் கட்சியினருக்கு புது நம்பிக்கையையும் கொடுத்துள்ளதாக தெரிகிறது.