Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வேலூர் தொகுதி தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? – தொண்டர்களுக்கு டிடிவி கடிதம் !

வேலூர் தொகுதி தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? – தொண்டர்களுக்கு டிடிவி கடிதம் !
, புதன், 10 ஜூலை 2019 (08:33 IST)
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை புறக்கணித்தது ஏன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விளக்கம்ளித்து தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

வேலூர் தொகுதியில் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தலை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிட உள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமியும் போட்டியிடுவார்கள் என அக்கட்சிகள் சார்பில் அறிவித்துள்ளன.

இதையடுத்து இந்த தேர்தலில் பெரிது எதிர்பார்க்கப்பட்ட அமமுக கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். இதற்கு மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அந்த கட்சி அடைந்த படுதோல்வியேக் காரணம் என சொல்லப்பட்டது. இது குறித்து தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக டிடிவி தினகரன் ஒரு கடிதத்தை நேற்று எழுதியுள்ளார்.

அதில் ‘நமது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணி ஆகஸ்ட் மாதம் நிறைவுபெறக்கூடும். அதுவரை நாம் சுயேட்சையாகத்தான் போட்டியிட முடியும். அப்படி என்றால் வேலூர் தேர்தலுக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தல்களுக்கும் தனித்தனியாக சின்னம் வாங்கி போட்டியிட்டால் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் குழப்பமாக இருக்கும். அதனால் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம்.ஆனால் இந்த முடிவு பயத்தின் காரணமாக எடுக்கப்பட்டது என நமது எதிரிகள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடும். அவற்றைப் புறந்தள்ளி நமது இயக்கத்துக்கான நிரந்தரமான புதிய அடையாளத்தோடு மக்களைச் சந்திப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்பார்த்தது பவுண்டரிகள், ஆனால் கிடைத்ததோ நோ பால்களும், வைட்களும்: சசிதரூர் எம்பி