நெல்லை பள்ளி விபத்து தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரருக்கு 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.
நெல்லையில் உள்ள சாஃப்டர் என்ற பள்ளியில் கழிப்பறை சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததை அடுத்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த பள்ளிக்கு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அலுவலர் அறிவித்துள்ளார்.
மேலும் சுற்றுச் சுவர் இடிந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெல்லை பள்ளி விபத்து தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோருக்கு வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இந்த உத்தரவிட்டுள்ளது.