இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தை நேற்றிரவு சென்னை அபிராமி திரையரங்கில் பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
மெர்சல்' படத்தில் கூறப்பட்ட ஜிஎஸ்டி குறித்த கருத்துக்கள் மக்கள் மனதை பிரதிபலிப்பதாக இருப்பதாகவும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மருத்துவமனை காட்சிகள் போல் இப்போதும் சில தனியார் மருத்துவமனைகளில் நடந்து வருவதாகவும் வைகோ தெரிவித்தார்.
மேலும் விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் வித்தியாசமாக நடித்திருப்பதாகவும், ரஹ்மானின் இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.