பாரதிய ஜனதா கட்சியின் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் நிலை என்ன என்ற கேள்வி அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து இன்று பேட்டியளித்த திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் இடத்தில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று தெரிவித்தார்.
மேலும் இது மாதிரி சொல்வதற்கு இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவருக்காக தைரியம் இருப்பதாக என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்தால் அந்த கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்று கூறப்படுகிறது.