ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பக்கிச்சூடு சம்பவ்ம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. ஸ்டெர்லையை நிரந்தரமாக மூடுவதாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் சார்ப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.