விக்டோரியா கௌரிக்கு எதிரான மனு தள்ளுபடி.. நீதிபதியாக பதவியேற்பு!
விக்டோரியா கௌரி நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து விக்டோரியா கௌரி சற்று முன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியாக பதவி ஏற்று கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விக்டோரியா கௌரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தெரியாமல் இருக்கும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் விக்டோரியா கௌரி மீது எந்தவிதமான முறைகேடு புகார்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் நன்கு அலசி ஆராய்ந்து தான் நீதிபதி பெயர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் விக்டோரியா கௌரிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்