Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விஸ்வகர்மா சமூகத்தினர் போராட்டம்

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விஸ்வகர்மா சமூகத்தினர் போராட்டம்
, புதன், 10 அக்டோபர் 2018 (19:00 IST)
விஸ்வகர்மா சமூகத்தின் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி – கரூரில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக விஸ்வகர்மா சமுதாய மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம் மற்றும்  தமிழக விஸ்வர்கர்மா சமுதாயம் சார்பில் அமைப்பின்  உயர்மட்ட ஆலோசனைகுழு உறுப்பினர்  பெரியசாமி ஆச்சாரியார் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில்  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் சண்முகம் பொது செயலாளர் விசு சிவகுமார்  அகில இந்திய தலைவர் மணிசங்கர் உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்ட இவ்வமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பொது செயலாளர் விசு சிவகுமார் பிரதமர் மோடி செப்டம்பர் 17-ம் தேதியை விஸ்வகர்மா ஜெயந்தி தினமாக அறிவித்து அன்றைய தினம்  விடுமுறை அளித்துள்ளார். இதனை அனைத்து மாநில முதல்வர்களும் அறிவித்து கடைபிடிக்க கூடிய சூழலில் தமிழகத்தில் மட்டும் தமிழக அரசு அறிவிக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்றும் அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் எங்களது போராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும் என எச்சரிக்கையாகவே தெரிவித்துகொள்கிறோம் என்றார்.

மேலும் கைவினைஞர் நல வாரியம் பொற்கொல்லர் வாரியங்களையும் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் அதே போல் 411 -சட்டத்தால் பொற்கொல்லர் மற்றும் நகை வியாபாரிகளை கொடுமைபடுத்தும் காவல் துறையினரால் தொழில்கள் பாதிக்கும் நிலமை ஏற்பட்டு உள்ளது.எனவே அதற்க்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.


சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ம.தி.மு.க அலுவலகத்தில் தமிழக ஆளுநரை விமர்சித்த வைகோ...