நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ‘இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் கூற முடியாது’ என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனருமான விசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஹலோ கமல்ஜீ.. நீங்க நடிச்ச ‘சிம்லா ஸ்பெஷல்’ படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதிய விசு நான்.
நீங்க பெரிய அரசியல்வாதி ஆயிடுவீங்க.. வாழ்த்துக்கள். இந்து மதமும்.. இந்துக்களும் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்கன்னு புரிஞ்சிக்கிட்டு அவங்களை சீண்டிவிட்டா யாராவது எங்கேயாவது எகிறுவான்.. அதை வச்சி அரசியல் பண்ணலாம்னு யாரோ ஒரு குள்ள நரி உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கு.
வழக்கம் போல நீங்க தலையை சுத்தி மூக்கை தொடப்போக, யாரோ ஒருத்தன் ஒரு மூலைல உங்கள தூக்கில போடனும்னு கதறப்போக.. அரசியல் போணி ஆனவன், ஆகாதவன், அரசியல்ல விளங்கினவன், விளங்காம போனவன் என எல்லோரும் இப்போ நான் நீன்னு டிவி முன்னாடி வரிசை கட்டி நிக்கிறாங்க...
அப்படியே, பார்ப்பனன், ஆரியக்கூட்டம், கைபர்/போலன் கணவாய்.. ஆப்கானிஸ்தான்ல ஆடு மாடு மேச்ச கூட்டம் இப்படி ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க.. பிச்சிக்கிட்டு போகும் பாவம் உங்களுக்கும் பொழுது போக வேணாமா. யாருமே இல்லை.. தனிக்கட்டை.. வயசும் ஆயாச்சு..” என கிண்டலாக கடிதம் போல் பதில் அளித்துள்ளார்.
விசு தன்னை பாஜகவுடன் இணைத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது..