தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி நோட்டாவுக்கும் கீழ் வாக்கு சதவீதம் பெரும் கட்சி என்று திராவிட கட்சிகள் கேலி செய்து கொண்டிருக்கின்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 293 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன
பாஜக ஆட்சியை மீண்டும் கைப்பற்றுமா அல்லது சில மேஜிக் நடந்து இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை இலக்கங்களில் வாக்கு சதவீதம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது
அதன்படியே தற்போது 10 சதவீத வாக்குகளை பாஜக கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கட்சி வாரியாக பெற்ற வாக்கு சதவீதம்
திமுக - 25.09%,
அதிமுக- 20.94%,
பாஜக- 10.02%,
காங்கிரஸ் - 10.68%
Edited by Mahendran