கோவையில் உள்ள ஒரு வாக்கு சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக சில மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் தற்போது இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்குப்பதிவு சற்றுமுன் முடிவடைந்தது என்பதும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் ராசிப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதனை அடுத்து வாக்குப்பதிவுக்கு கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த ஒரு வாக்கு சாவடியில் மட்டும் இரவு 9 மணி வரை வாக்கு செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து வாக்காளர்கள் அங்கு வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருவதாகவும் 9 மணிக்குள் அனைவரும் வாக்குகளை செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.