சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
மேலும், கூடுதல் மின்சாரம் வங்கவும் முடிவு செய்திருப்பதாகவும், நிலக்கரியை எடுத்து வருவதில் கால தாமதம் உள்ளாதால், மத்திய தொகுப்பு மின்சாரம் கிடைக்காததும் காரணம் எனத் தெரிவித்தார்.
தினமும் சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைந்துள்ளதுதான் மின் தடைக்குக் காரணம் என செந்தில் பாலாஜி கூறினார்.