மதுக்கடைகளை மூட இன்னும் என்ன தயக்கம்? அரசுக்கு ராமதாஸ் கேள்வி ...
சீனாவில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவில் உள்ள பல்வேரு நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்த நிலையில்,நேற்று முன் தினம் இரவு நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, வரும் மார்ச் 22 ஆம் தேதி, அனைத்து மக்களும் ஊரடங்கு உத்தரவை மேற்கொள்ள வேண்டும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நேற்று, மாலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக எல்லைகள் அடைக்கப்படுவதாகவும், அத்தியாசிய வாகனங்கள் தவிர மற்ற வாகங்கள் அனுமதி மறுக்கப்படும் எனவும், அரசுக் கழகப் பேருந்துகள் இயங்காது, என அறிவித்திருந்தார்.
இதையே அனைத்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தகவல் தெரிவித்தது. மணல் உரிமையாளர்களும் அதையே தெரிவித்தனர்.
இந்த நிலையில்,தமிழக முதல்வர் அவர்களே மதுகடைகளை மூட இன்னும் என்ன தயக்கம் உடனடியாக செயல்படுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் அனைத்து எச்சரிக்கைகள்; விழிப்புணர்வு பரப்புரைகளை கடந்து மதுக்கடைகளில் கூட்டம் வழிகிறது.
மதுக்கடைகள் கொரோனா வைரஸ் பரவு இடமாக மாறிவிடக்கூடாது. ஆகவே மாபெரும் மனிதப் பேரழிவை தடுக்க மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.