கடந்த சில மாதங்களாக வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது திடீரென அந்த வசதி தொழில்நுட்ப காலமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு எளிமையான பயணத்தை தருகிறது என்றும் குறைவான கட்டணத்தில் நிறைவான பயணம் செய்யும் வகையில் மெட்ரோ பயணம் இனிமையாக இருப்பதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெரும் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது
இருப்பினும் பயண அட்டை, மொபைல் செயலி, பேடிஎம் ,போன் பே, சிங்கார சென்னை கார்டு போன்ற பிற சேவைகள் மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொழில்கோளாறு மீண்டும் சரி செய்யப்பட்டவுடன் வாட்சப் மூலம் ரயில் டிக்கெட் பெரும் வசதி கொண்டு வரப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.,