விஜய் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரையும் அறிவித்துள்ளார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று கூறியுள்ள விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையே குறிவைத்துள்ளார்
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை காரணமாக எந்த கட்சிக்கு வாக்குகள் குறையும் என்ற கருத்து சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் அரசியல் கட்சிக்கு பெரும்பாலும் இளைஞர்கள் தான் ஓட்டு போடுவார்கள் என்பதால் இளைஞர்களை அதிக அளவில் வாக்காக மாற்றி வைத்துள்ள சீமானுக்கு தான் பெரும் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி விஜய் ரசிகர்கள் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சியிலும் இருப்பதால் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் விஜய் குறி வைப்பது முதல் முறையாக வாக்கு செலுத்தும் இளைய தலைமுறையினரை என்பதால் புதிதாக வாக்கு செலுத்துபவர்கள் விஜய்க்கு அதிகம் வாக்கு செலுத்துவார்கள் என்ற கருத்தும் பகிரப்பட்டு வருகிறது
மொத்தத்தில் அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும் நாம் தமிழர் கட்சிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.