திமுக தலைவர் ஸ்டாலின், விக்கிவரவாண்டி, மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக - திமுக இடையே அரசியலில் எதிரும் புதிருமான நிலையே காணப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக , பாஜக உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனாலும் இந்தக் கூட்டணியால் தேனி தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் வெற்றிபெற முடியவில்லை.
இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகள் பல தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஆனால் ஆட்சியைப் பிடிக்கவில்லை என இக்கூட்டணிக் கட்சிக்கு வருத்தம் இருந்தது.
தமிழகத்தில் இந்த நிலை என்றால், மத்தியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கு அதிமுக மதச்சார்பற்ற அரசு என மக்களிடம் விளம்பரப்படுத்திவருகிறது. ஆனால் எதிர்கட்சிகள் காங்கிரஸ் - திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும் மதச்சார்புள்ளவை என பகிரங்கமாக குற்றம்சாட்டிவருகின்றன.
அதுவே, பாஜக - அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு வரும் தேர்தலில் அதிருப்தி ஓட்டுகளாக மாற வாய்ப்புள்ளன.
அதேசமயம் வரும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியைத் தவிர இருபெரும் திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாய் மற்ற கட்சிகள் போட்டியிடாததும் கூட ஓட்டுக்கள் சிதறுபோகாமல் இருக்க உதவும். அந்த வகையில் ஆளும் கட்சிதான் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஜெயிக்கும் எனவும் திமுக - காங்கிரஸ் ஊழல் கட்சிகள் என அதிமுகவும் தம் பங்குக்கு தீவிர பிரசாரத்தில் முழக்கமிட்டு வருகின்றனர்.
அடுத்து வரப்போகும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாய் இந்த இடைத்தேர்தல் உள்ளதென்றால் அது மிகையல்ல.
அதேசமயம் ,அங்கு திருமங்களம் பார்முலாவைப்போன்று பணநாயகம் தாண்டாவம் ஆடாமல் இருந்தால் ஜனநாயகத்திற்கு நல்லது.
அதனால் இருபெரும் திராவிட கட்சியில் யார் யார் இந்த இரண்டு தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.