சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏன் அதிகரிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது.
அதோடு, கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது, அதேபோல கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, சென்னையில் மட்டும் பாதிப்பு ஏன் அதிகரிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, சென்னையில் மக்கள் தொகை அதிகம். சென்னையை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்து ஒன்றரைக்கோடி பேர் மக்கள் தொகை உள்ளது.
நோயின் பரவல் அதிகம் என்பதால் சென்னையில் நோயைக் கட்டுபடுத்துவது சவாலான வேலைதான். 4 நாட்கள் முழு ஊரடங்கு எனும் போது அதன் தொடர்பு செயினை தகர்க்க செய்து பரவுதலை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.