தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021 வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சார செய்து வந்த நிலையில் நேற்றுடன் இப்பிரசாரமும் ஓய்ந்தது.
இந்நிலையில், இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை தேர்தல் நாள் என்பதால் சுமார் 6,28,69,955 வாக்களர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் இன்று, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அதிகாரி சத்திபிரதா சாகு கூறியதாவது: தமிழகத்தில் சுமார் 6,28,69,955 வாக்களர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில்,ஆண்கள் 3,09,23,651 பேர் வாக்களிக்கவுள்ளனர். பெண்கள் 3,19,39,112 பேர் வாக்களிக்கவுள்ளனர்.7,192 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தேர்தலில் 4,17,521 தேர்தல் பணியாளர்கள் உள்ளனர். சுமார் 1,58,263 பேர் பாதுகாப்பு பணியில் காவலர் உள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணிவரையில் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லாவிட்டாலும் வாக்காளார் பட்டியலில் பெயர் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் எனவும்,வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.